சென்னை :
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3 சதவீதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த உயர்வை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தற்போது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை தமிழக அரசு எடுத்துத் தர வேண்டியதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பரிந்துரையை முதல்வருடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
இதேவேளை, 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைக்கு மின் கட்டண உயர்வு நடைபெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.