சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் எடுத்துக்கொண்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு,தனியார் டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை மற்றும் பொதுக்கள் பங்களிப்புடன் ரூ. 71.00 இலட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவியர்களுக்கு அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட (கழிவறை) சுகாதார வளாகத்தினை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள்கள் எதிர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.













