அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்தற்கான கர்தினால்கள் மாநாடு வாடிகனில் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. போப் பிரான்சிசின் இறுதிசடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று விட்டு வந்த நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செய்யறிவு புகைப்படம் என்று கூறப்படும் டிரம்ப்பின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது