தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர் :-
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் மதிய ஒன்றிய திமுக சார்பில் திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்தா விஜயகுமார் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முன்னிறுத்தி உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடினர்.


















