திமுக செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைதொகை போன்ற திட்டங்களை உயர்த்தி தருவதாக கூறி தேர்தலில் வாக்குகளை பெற ஒரு கூட்டம் தொடங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் விஜய் ஊழல் ஆட்சி செய்வோம் என்று பேசிக்கொண்டு இருப்பதாக குத்தாலத்தில் தமிழ் சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்த கொளத்தூர் மணி விமர்சனம்;-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ் சீர்திருத்த முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறுகையில்
அறிவியல் வளர்ச்சி பெற்று விட்ட நாம் வாழ்வியல் அறிவியலை பொருளீட்டலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் வாழ்க்கையிலும் நான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படக்கூடியவர்களுக்கு இதுபொருந்தும். அனைவரும் சுயமரியாதை திருமணத்தை பின்பற்ற வேண்டும். புதிதாக அரசியல் கட்சி தொடங்கியவர்கள் முதல்வர் ஆனால் ஊழல் அற்ற ஆட்சி கொடுப்போம் என்று கூறுகிறார்கள். ஊழல் அற்ற ஆட்சி கொடுத்தால் மகிழ்ச்சிதான். நானும் முதல்வரானவுடன் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கோடி ரூபாய் தரலாம் என்று இருக்கிறேன். திமுகவின் சாதனை ஆட்சி தொடர வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற நிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு உள்ளது. நமக்கு பொருத்தம் இல்லாத விருப்பமில்லாத எதிரான கருத்துக்களை கொண்ட மதவாத பாஜக நுழைவதற்கு பதிலாக அதிமுக வலுவாக இருந்தால் மகிழ்ச்சி அடைவோம் அதற்கு வாய்ப்பு இல்லாமல் நிபந்தனையற்ற அடிமையாக அதிமுக மாறி இருப்பது சற்று மனவேதனையாக கருதுகிறோம். முதன்முதலாக திமுக ஆட்சியில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது சமுதாயத்தில் அடித்தட்டு மக்களை கருத்தில்கொண்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலவசம் கொடுப்பதை கேவலமாக பேசிய பாஜகதான் குஜராத்தில் முதலில் செயல்படுத்தியது. இத்திட்டத் யாரெல்லாம் ஏளனம் செய்தார்களோ அவர்கள் எல்லாம் தற்போது ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை வாக்குநோக்கத்தோடு என்று சொல்லலாம். ஒரு திராவிட இயக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் செயல்படுத்திய திட்டங்களை அதனைத் தேர்தலில் வாக்கு பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு கூட்டம் தொடங்கிவிட்டது. எப்படியோ மக்களுக்கு சென்றுகொண்டு இருக்கிறது. தவெக ஓட்டு வாங்குவார்களா தேர்தல் வரைக்கும் இருப்பாங்களான்னு பாத்துட்டு அதுக்கு அப்புறம் நான் சொல்றேன். தவெகா என்டிஏ கூட்டணிக்கு போனால் மிக்க மகிழ்ச்சி . சட்டப்படி இறக்குமதி செய்யப்பட்ட வண்டிக்கு வரி கட்டாமல் இருக்க நீதிமன்றம் சென்று தடை செய்ய பார்த்த தவெக தலைவர் விஜய் தான் ஊழலற்ற ஆட்சி கொடுப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு உண்மையா இருக்கிறார் என்பது அவர் ஆட்சிக்கு வந்தால் தான் தெரியும் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மீசை முளைக்கும் வரை நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. இறையாண்மைக்கு பெரும் அவமானத்தை தேடி தந்துள்ளார் மோடி. இறையான்மை உள்ள நாடு என்றால் எங்கள் நாட்டின் முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்பதுதான் இறையாண்மை. பெட்ரோல், டீசல் வாங்க அமெரிக்காவிடம் கேட்பது இந்தியாவிற்கு மோடி ஏற்படுத்திய பெரிய அவமானங்களில் ஒன்று. மத்திய அரசு எந்த சட்டத்தையும் மதிக்காதவர்களாக உள்ளார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரால் நியமிக்கப்பட்ட வேறு ஒருவர். முடிவு செய்து தேர்தல் ஆணையரை அவர்கள் ஆளாக மாற்றிவிட்டார்கள். தனக்கு உறுதியாக எதிர்நிற்கிற திமுக ஆட்சியின் மீது நெருக்கடி கொடுக்க எந்த நிதியும் கொடுக்காத முறையை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஹிந்தி கற்பிக்கவில்லை என்று 2500 கோடி கொடுக்காமல் உள்ளனர். 11.9 சதவிகிதம் வளர்ச்சியை காட்டியிருக்கிறது திமுக ஆட்சியின் சிறப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், அன்பழகன், திராவிடர் விடுதலை கழகம் மகேஷ், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்த கொண்டனர்.















