அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு,
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான
விளையாட்டுப் போட்டிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி,
தொடங்கி வைத்தார். 14 வயதிற்கு மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இப்போட்டிகளானது, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள், கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் கைகள் பதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கென்று அவர்களது குறைபாட்டின் அடிப்படையில் வயது வரம்பு பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதில், பல்வேறு வகையான தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளது. இன்றைய தினம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெறுவோர், மாநில அளவில் சென்னையில் வருகின்ற 19.11.2026 மற்றும் 20.11.2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) சந்திரமோகன், மாவட்ட விளைாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.







