தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது, அவர் இயக்கி நடிக்கும் புதிய படம் ‘இட்லி கடை’ உருவாகி வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் வழியில், தனுஷும் ரசிகர்களை நேரில் சந்திக்க ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
ரஜினி, விஜய் போன்றோர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. இதேபோல, தனுஷும் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். ரசிகர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் 25 வாரங்களுக்கு முன்பதிவு செய்து உள்ளார்.
ஜூலை 27 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 500 ரசிகர்களை தனுஷ் சந்தித்து பேச இருக்கிறார். கடந்த வாரமே இந்த சந்திப்பு துவங்க வேண்டியிருந்தது. ஆனால், காலில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக அவர் பங்கேற்க முடியவில்லை.
இந்த நடவடிக்கை, தனுஷ் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற பரிசீலனையை மீண்டும் எழுப்பியுள்ளது. “ரஜினியின் பாதையை பின்பற்றி வரும் தனுஷ், விஜயின் பாதையைப் போல அரசியலிலும் தொடக்கம் மேற்கொள்வாரா?” என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தனுஷின் நெருங்கிய வட்டாரத்தினர், “இது தொடர்பான முக்கிய அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட இருக்கிறார்” என கூறுகிறார்கள்.