வி.சி.க நிர்வாகி மறைவு இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏழ்மை நிலையில் பரிதவிக்கும் குடும்பத்திற்கு அமைச்சர் வன்னியரசு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் தேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ் உடல்நலக் குறைவால் ஒரு சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவத்தையும் அவர் கட்சிக்காகவும் சமூகத்துக்காக ஆற்றிய பணியை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கவனத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பார்த்திபன் சித்தார்த் என்பவர் எடுத்து சென்றார்.
இதனை அடுத்து உயிரிழந்த சுரேஷ் துணைவியார் கீதா விடம் அமைச்சர் வன்னி அரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, டெட் தேர்வு எழுதிட அறிவுறுத்தியதோடு அரசு உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்

















