விழுப்புரம்தெரிந்தோ தெரியாமலோ தவெக அதிமுகவை தொட்டு விட்டது. தவெக அழிவு விரைவில் ஆரம்பமாகும். விஜய் ஒரு கைப்புள்ளை. ஐந்து தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது. விழுப்புரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி காட்டம்
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த சி.வி.சண்முகம் மாற்றப்பட்ட நிலையில் புதிய மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விழுப்புரம் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் உயிரிழந்த நிலையில் அவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் பசுபதி.
மகேந்திரனின் மரணத்திற்கு காரணம் சிவி.சண்முகம் தான் காரணம். சிவி.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது. கட்சியை கைப்பற்றி, கட்சிக்கு பொதுச்செயலாளராக வேண்டும் என்ற நோக்கம் அதிமுக உண்மை தொண்டனின் உயிரை பறித்து விட்டது. விசி.சண்முகம் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டது நியாயமா?. அதிமுக என்ன தவெக போன்று கார்ப்பரேட் நிறுவனமா?. பொறுப்புகளை விலைக்கு வாங்க. அதிமுகவில் இருந்து குப்பையாக தூக்கி எறியப்பட்ட கழிவுகளை விலைக்கு வாங்கியுள்ளது தவெக. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனதாக வரலாறு. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அதிமுகவை தொட்டு விட்டீர்கள் உங்கள் அழிவு விரைவில் வரவுள்ளது. விழுப்புரம் தொகுதியில் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் பிடிக்காத வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக அதிமுகவில் சேர்ந்த சிலர் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனர். இதே போன்று திமுகவைச் சேர்ந்த சிலரும் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனர். சிலர் குழந்தைகளுக்காக வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது ஆட்சிக்கு வருவோம் என்று. நம்பிக்கை இல்லாமல் வந்த ஆட்சி இது. தூய சக்தி என்பவர் கைப்புள்ளை. மேடையில் சிஎம் சார், ஸ்டாலின் சார் என பேசும் விஜய். ஸ்டாலின் வீட்டுக்கு போனால் ஐயா, சாமி என காலில் விழுகிறார். கைப்புள்ள எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா?. கூட்டத்தில் பேசும்போது விஜய் ஒரு மருந்து சக்தி. பத்திரிகையாளர்களை பார்த்தால் பயந்த சக்தியாக மாறிவிடுவார். விவசாயிகளுக்கு துரோக சக்தியாக மாறிவிட்டார். விபத்தில் ஆட்சிக்கு வந்த கட்சிதான் தாவீகா. திமுக, அதிமுக ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில் இடையில் கைப்புள்ள விஜய் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. விஜயால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாது. பழைய ஓய்வூதிய திட்டம், மகளிருக்கு 2500 ரூபாய், ஒரு பவுன் தங்கம் கஒரு, தாய் மாமன் சீரு, அன்னபூரணி திட்டத்தில் ஆறு சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பொய்களை சொல்லி வாக்குகளை வாங்கிய ஏமாற்றியுள்ளார். மேலும் சோபா கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளார். இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. அப்படியே நடந்தாலும் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது. மக்கள் தெளிவாகி விட்டார்கள். அனைத்து கட்சிகளும் உன்னை எதிர்க்க தயாராகிவிட்டனர். உன்னை யாரும் கண்டுகொள்ளாத போது ஆட்சிக்கு வந்து விட்டாய். இனிமேல் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. *













