சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு இசை அமைத்துள்ளதா் அனிருத்.
பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளியாகிய ‘சிக்கிடு’ மற்றும் ‘மோனிகா’ பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கின்றன. கடந்த வாரம் வெளியான ‘மோனிகா’ பாடல் வீடியோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் மூன்றாவது பாடலான ‘பவர் ஹவுஸ்’ விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடல் ஜூலை 22ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு, ஐதராபாத்தில் நடைபெறும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.