June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை

by sowmiarajan
December 4, 2025
in News
A A
0
விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கியது சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுக்குத் தமிழக அரசு தற்காலிகப் பணியை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும் என அந்தப் பெண் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் துரைச்சாமிபுரம் அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் பலியாகினர். இதில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா (55) என்பவரும் அடக்கம்.

மல்லிகாவின் மகள் கீர்த்திகா (33), பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த இவர், தற்போது தாயையும் இழந்து ஆதரவற்ற நிலையில், தனக்கு நிவாரணமும், நிரந்தர வேலை வாய்ப்பும் வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்தார்.

கீர்த்திகாவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரைத் தனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், வேண்டிய உதவி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்படி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், கீர்த்திகாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, புளியங்குடி நகராட்சியில் ‘டேட்டா என்ட்ரி’ (தரவு உள்ளீட்டாளர்) பணிக்கான ஆணையை வழங்கினார்.

தனக்கு வழங்கப்பட்ட பணியானது தற்காலிகமானது என்பதால், கீர்த்திகா அதிருப்தி அடைந்தார். தான் எம்.ஏ., பி.எட்., வரை படித்துள்ளதாகவும், தனது கல்வித் தகுதிக்கு ஏற்ற ஒரு நிரந்தர அரசு வேலையை வழங்க வேண்டும் என அவர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். முதலமைச்சரின் நேரடி உறுதியளிப்புக்குப் பிறகும், கல்வித் தகுதியைக் குறைத்துத் தற்காலிகப் பணி வழங்கப்பட்டது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் நாகராஜ் கூறுகையில், “விபத்துப் போன்ற சம்பவங்களில் நேரடியாக நிரந்தர அரசுப் பணி வழங்குவதில்லை. கீர்த்திகாவின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது மாதம் ₹12,000 ஊதியத்தில் இந்தப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் மாறினாலும் அவரது பணி தொடரும். அவரது விருப்பப்படி ஆசிரியைப் பணி கிடைத்தால் செல்லலாம். புளியங்குடி நகராட்சியிலேயே நிரந்தரப் பணியிடம் காலியானால் அவரை நியமிக்க வாய்ப்புள்ளது. அவர் மீது அரசு கருணையுடன் நடந்து கொள்ளும்,” என்று விளக்கம் அளித்தார். எவ்வாறாயினும், நிரந்தரப் பணி கிடைக்கும் வரை இந்தத் தற்காலிகப் பணியை ஏற்பதா, இல்லை நிரந்தர வேலைக்காகப் போராடுவதா என்ற குழப்பத்தில் கீர்த்திகா உள்ளார்.

Tags: disability rightsdisabled employeeemployment controversyfamily tragedysocial supporttemporary job
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுவால் 2.98 லட்சம் பேர் பலி; டாஸ்மாக் எதிர்ப்பு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Next Post

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

"இது தமிழ்நாடா... இல்லை கொலைநாடா?" - தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.