மின்சார வாரியத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் த.வெ.க., அரசை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தார். திட்ட செயலாளர் அருள், சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் மூர்த்தி, கோட்ட செயலாளர்கள் கண்ணியப்பன், அசோக்குமார், திட்ட பொருளாளர் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். டெண்டர் முறையில் தனியாரை கணக்கீட்டு பணி செய்திட வெளியிடப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும். மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும், இதற்கு காரணமான த.வெ.க., அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மைய கோாட்ட செயலாளர் பழனி நன்றி கூறினார்.

















