மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி இறக்கும் சி.ஐ.டியு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க கோரி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றி இறக்கும் பணியை சி.ஐ .டி.யூ வை சேர்ந்த 48 கூலி தொழிலாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்கள். மயிலாடுதுறை, ஆக்கூர், சேத்திர பாலபுரம், எருக்கூர் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் கிடங்கில் இருந்து மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை ஏற்றி இறக்கி வைத்து வருகின்றனர். 50 கிலோ மூட்டை ஒன்றிற்கு 3 ரூபாயும் ஆயில் பாக்ஸ் ஒன்றுக்கு 1 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது. இந்தக்கூலி விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் இல்லாததால் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு 10 ரூபாயும் ஆயில் பாக்ஸுக்கு 5 ரூபாயும் உயர்த்தி வழங்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூலித்தொழிலாளிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்து சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














