அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் உற்சாகமாக வேட்புமனுத் தாக்கல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, வரும் 6-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று சீர்காழி தொகுதியில் போட்டியிட உள்ள
அஇஅதிமுக சார்பில் வேட்பாளர் ம. சக்தி அவர்களும்,
திமுக கூட்டணி (மதிமுக) சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் செந்தில் செல்வன் அவர்களும்,
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி சார்பில் தமிழ்வேந்தன் அவர்களும்,
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களும்
தனித்தனியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்கு முன்பு
அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் பேரணியாகத் திரண்டு வந்து மனுத்தாக்கல் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோட்டாட்சியர் அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, சீர்காழி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தற்போது மேலும் வேகம் எடுத்துள்ளது.

















