டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது, அதனால் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது
இதனையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய கருண் நாயரின் பழைய எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார் .
அந்த பதிவில், “டியர் கிரிக்கெட், எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியுமா?” என்று பதிவிட்டிருந்தார்.
Dear cricket, give me one more chance.🤞🏽
— Karun Nair (@karun126) December 10, 2022