செவிலியர் பணியிடங்கள் Redeployment நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி விழுப்புரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
விழுப்புரத்தில்
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், அரசு செவிலியர் பணியிடங்களை Redeployment செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நான்கு முறை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் திறன் மேம்பாட்டு செவிலியர் (Mentor Staff Nurse) பணியிடங்களை மாற்று பணியிடங்களுக்கு Redeployment செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியது.
மேலும், செவிலியர் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கி, பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எம்ஆர்பி (MRB) ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், புதிதாக உருவாக்கப்பட்ட சுகாதார மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு செவிலியர் பணியிடங்களை ஏற்படுத்துதல், ஒவ்வொரு சுகாதார வட்டத்திற்கும் ஒரு Mentor Staff Nurse நியமித்தல், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தது 6 செவிலியர்களை நியமித்தல் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகள் பொதுமக்களின் மருத்துவ நலனையும், கிராமப்புற சுகாதார சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செவிலியர்கள் ராஜேஸ்வரி
சங்கீதா,பூங்கொடி,
ரேவதி,மகாராணி
கிளாரா, மணிமேகலை
தில்லைக்கரசி, நளினி
ரேவதி,மற்றும் வழிகாட்டி பணியாளர் செவிலியர் விழுப்புரம் HUD மற்றும் கள்ளக்குறிச்சி HUD ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.













