சீர்காழி அருகே திருப்புங்கூரில் 160 மாணவிகள் ஒரே நேரத்தில் இசை மற்றும் பரதம் மூலம் சிவபெருமானுக்கு மரியாதை செய்யும் சாதனை முயற்சி
சீர்காழி அருகே திருப்புங்கூர் சிவலோகநாதர் சுவாமி கோயில் பிரகாரத்தில் நாட்டிய தேவதைகளும், சிவஞான களிர்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் இசை மற்றும் பரதம் மூலம் சிவலோகநாதருக்கு மரியாதை செய்யும் சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 160 மாணவிகள் பரதம் ஆடிட 50 மாணவ மாணவிகள் தேவார இசை பதிகங்கள் பாடினர் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு அஸ்பையர் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கிகரித்து அதன் நிர்வாக இயக்குனர் அகமது மாணவிகள் மற்றும் நாட்டிய நிறுவன ஆசிரியைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்து பாராட்டினார்

















