சீர்காழி அருகே கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சீர்காழி
தாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் கடவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சகீது நகர் உள்ளது இந்த நகர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வீடு கட்டி வசித்து வருகின்றன. இந்த நகர் பகுதியில் உள்ள பெரும்பான்மையான சாலைகள் மண் சாலைகளாக இருப்பதால் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் பள்ளிக்கூடம், மதரசா,அலுவலகம், வணிக நிறுவனங்கள், உள்ளிட்டவைகளுக்கு செல்ல சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக மழை காலங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மன்சாலையாக உள்ள சாலையை மழை நீர் தேங்காதவாறு சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகர அமைக்கப்பட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம் இதனால் வரை இந்த பகுதியில் உள்ள மன்சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலையை சீரமைக்க கோரி மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புகார் செய்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை மழைக்காலங்களில் இங்குள்ள குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. இதேபோல் சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் பராமரிக்கப்படாததால் சாலைகளில் முள் செடிகள் முளைத்து சாலை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே அரசு மண் சாலையாக உள்ள சாலையை தார் சாலை அல்லது சிமெண்ட் சாலைகளாக அமைத்துக் கொடுத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இல்லையென்றால் சாலையை சீரமைக்க கோரி விரைவில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தனர்.

















