தமிழ் திரையுலகில் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘அரசன்’. சிம்புவின் 49வது திரைப்படமாகும் இப்படம், வடசென்னையில் உள்ள யுனிவர்சல் உலகைச் சுற்றிய ஒரு கதையாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றுகிறார். இதுவரை அனிருத் பெயர் உறுதி செய்யப்படவில்லை என்ற நிலையில், தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் வெளியிட்ட போஸ்டர் மூலம் இதை உறுதிசெய்துள்ளார்.
இந்தப் படத்தின் ப்ரோமோ டீசர் வெற்றிமாறனின் 50வது பிறந்த நாளான செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முழு ப்ரோமோ அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதை திரையரங்கிலும் முதலில் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அட்டைப்பட அறிவிப்பில், அனிருத் பெயரும் இடம்பெற்றுள்ளது. ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு திரையரங்கில் வெளியாகும், மேலும் யூடியூப் மூலம் நாளை காலை 10 மணிக்கு வெளிவர உள்ளது.
வெற்றிமாறன் இதுவரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தவிர சந்தோஷ் நாராயணன், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியுள்ளார். அதேசமயம், அனிருத் – வெற்றி கூட்டணி முதன்முறை ‘அரசன்’ படத்தில் இணைந்துள்ளது. மேலும், பல வருடங்களாக சிம்பு – அனிருத் நல்ல நண்பர்கள் என்றாலும், எந்தப் படத்திலும் ஒரே நேரத்தில் இணைந்து பணியாற்றவில்லை என்பதால், இந்த கூட்டணி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.