திரைத்துறையில் நடிப்பை உறுதியாக காட்ட நினைக்கும் நடிகர்கள் பலரே, உண்மையான உணர்வுகளுடன் காட்சிகளை படமாக்க விரும்புகிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டாக, பாலிவுட் நடிகை இஷா கோபிகர் சமீபத்தில் பகிர்ந்துள்ள அனுபவம் தற்போது இணையத்தில் பேசப்படும் விஷயமாகியுள்ளது.
நடிகர் நாகார்ஜுனாவுடன் நடித்து இருந்த ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங் சம்பவத்தை நினைவுகூரும் அவர், கூறியதாவது :
“அந்த படம் எனது இரண்டாவது படமாகும். எனது காட்சிகள் இயற்கையாகவும் நிஜ உணர்வுகளுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தால், ஒரு கன்னத்தில் அறையும் காட்சியை உண்மையாகவே படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். முதலில் நாகார்ஜுனா மெதுவாக அடித்தார். ஆனால் இயக்குநர் வம்சி, காட்சி தத்துரூபமாக வரவேண்டும் என்பதால், உண்மையாகவே அடிக்கச் சொல்லினார்.”
“அதன்படி, சுமார் 14 முறை அவர் என்னை கன்னத்தில் அறைந்தார். கடைசியில் அவரது கைரேகையே என் கன்னத்தில் பதிந்து விட்டது. பின்னர் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால், நானே தானாகவே அதை கேட்டதால், அவரை சமாதானப்படுத்தினேன்,” என்று இஷா கோபிகர் கூறினார்.
இந்த சம்பவம் நடிப்பின் மீதான இஷா கோபிகரின் கடமை மற்றும் நாகார்ஜுனாவின் தொழில்முறை அணுகுமுறை ஆகியவற்றைக் காட்டுகிறது.