டெல்லி : பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனது தனியுரிமையை பாதுகாக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று நீதிபதி தேஜஸ் கரியா வழக்கை விசாரித்தார்.
வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த் நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, நாகார்ஜுனாவின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பல இணையதளங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார். குறிப்பாக சில இணைய பக்கங்களை கிளிக் செய்தால் ஆபாச இணையதளங்களுக்கு செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சில ஆடை விளம்பரங்கள் மற்றும் தயாரிப்பு பொருட்களில் நாகார்ஜுனாவின் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும், சில காட்சிகள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
நாகார்ஜுனா இதை அவரது தனியுரிமைக்கு இடையூறு என்றார். நீதிபதி வழக்கில் உரிய உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக உறுதி செய்தார்.

















