திருப்பதி: நடிகர் அஜித் குமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அவரை காண திரண்டிருந்த ரசிகர்கள் தல தல என கோஷமிட்ட போது, அஜித் செய்த ஒரு சைகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு திருமலையில் தங்கி இருந்த அஜித், இன்று அதிகாலை ‘சுப்ரபாத சேவை’ வழிபாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சுவாமி தரிசனம் செய்து, தீர்த்தப் பிரசாதம் பெற்றார்.
கோவிலிலிருந்து வெளியே வந்த அஜித்தை காத்திருந்த பக்தர்கள், “தல! தல!” என ஆரவாரம் செய்தனர். உடனே கோவிலுக்குள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில், அஜித் ஒரு கையை உயர்த்தி சைகை காட்டினார். அவரின் சைகையைக் கவனித்த ரசிகர்கள் உடனே அமைதியாகி விட்டனர்.
இதற்கிடையில், காது கேளாத மாற்றுத் திறனாளி ஒருவர் அஜித்திடம் செல்பி எடுக்க வேண்டுமென கேட்டபோது, அவரே ரசிகரின் மொபைலை எடுத்து புன்னகையுடன் செல்பி எடுத்து தந்தார்.
அஜித்தின் இந்த மனிதநேயமும் மரியாதையுடனான நடத்தை பற்றிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளன.

















