மயிலாடுதுறையிலிருந்து அணைக்கரை செல்லும் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் ஊர் பெயர்களை குறிப்பிடும் எல்இடி திரையில் குத்தாலம் பயலுக கொடூரமா என்ற வாசகம் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து அணைக்கரை வரை செல்லும் 26 ஏ என்ற மகளிருக்கான நகரப் பேருந்தில் பின்புறத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி திரையில் ஊர் பெயர்கள் ஓட விடப்பட்டிருந்தது. இந்த பேருந்து இன்று மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திரும்பி வந்த பேருந்தில் எல்இடி திரையில் குத்தாலம் பயலுக கொடூரமா என்ற வாசகம் ஓடிய நிகழ்வு வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு மர்ம நபர்கள் ஹேக் செய்து ஓடவிட்டுள்ளதாக பொதுமக்கள் பகிர்ந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அணைக்கரை சென்று திரும்பி வந்த பேருந்தில் தொழில்நுட்ப கோளாறால் ஊர் பெயர் ஓடாமல் மாறி ஓடியதாகவும் எப்படி மாறியது என்று புரியாத புதிராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.















