பருவ கால மாற்றம் காரணமாக, நெல் விவசாயம் பாதிக்கப்படும் நிலையில், மாற்றாக கரும்பு விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி முகாம், மங்கைநல்லூரில் நடைபெற்றது, சிபில் ஸ்கோர் இல்லாமல் விவசாயிகள் கடன் வழங்கி வருவதாக இந்தியன் வங்கி சார்பில் முகாமில் அறிவிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மங்கைநல்லூரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை சார்பில் விவசாயிகளுக்கான வேளாண் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று, கரும்பு நடுவில் புதிய தொழில்நுட்பங்கள், கரும்பை தாக்கும் நோய்கள் அதற்கான தீர்வுகள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் பருவநிலை கால மாற்றம் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், மாற்றாக லாபகரமான முறையில் கரும்பு விவசாயம் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அறிஞர்கள் அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து இந்தியன் வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, சிபில் ஸ்கோர் காரணமாக விவசாயிகள் வேளாண் கடன் பெறுவதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துரைத்தனர், வேளாண் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் பார்க்காமல் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் நாகராஜன், சர்க்கரை ஆலை சார்பில், தலைமை ஆலோசகர் கந்தசாமி, ஆலை நிர்வாகி சங்கரலிங்கம், கரும்பு விஞ்ஞானிகள் அறிவுக்கரசு, ரவிச்சந்திரன், செந்தில் பைப்ஸ் மதியழகன், மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.















