பிரபல நடிகை தமன்னா, தனது ஆரம்பகால திரைப்பட பயணத்தில் நேரிட்ட ஒரு விரும்பத்தகாத அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் அறிமுகமான அவர், பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே, முன்னணி நடிகையாக உயர்ந்தார். ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்ததோடு, தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில், தாம் திரையுலகில் புதியதாக இருந்த காலத்தில், ஒரு தென்னிந்திய நடிகர் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக தமன்னா தெரிவித்தார். தொடர்ந்து இவ்வாறு நடந்தால், அந்த படத்திலிருந்து விலகி விடுவேன் என எச்சரித்த பின்னரே, அந்த நடிகர் தனது போக்கை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.
ஆனால், அந்த நடிகர் யார் என்பது குறித்து தமன்னா எந்தவித குறிப்பையும் வெளியிடவில்லை. இக்குறிப்புகள் தற்போது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.