பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் மூன்று நாட்கள் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், டி என் சி எஸ் சி எடை தராசும், நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை நிலையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெற்ற நியாய விலைகடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் வருகின்ற 10.02.26 அன்று மாவட்ட தலைநகரங்களிலும், 11.02.26 அன்று கோட்ட அளவிலும் ,12.02.26 அன்று வட்ட அளவிலும் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
பேட்டி:ஜெயசந்திரராஜா,
(தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர்)

















