மன்னார்குடி அருகே காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் . தமிழக மக்களுக்கு எந்தவித இலவசமும் வேண்டாம் என பாதிக்கபட்ட மக்கள் பேட்டி .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காளாஞ்சிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காளாஞ்சிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுபானக் கடையை அகற்றக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்தப் போராட்டம் காரணமாக மன்னார்குடி – கும்பகோணம் – சென்னை செல்லும் முக்கிய சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே த. வெ. க மாவட்டச் செயலாளர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் தவெக நிர்வாகிகளுக்கும் போராட்ட காரர்களிடேயே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தவெக மாவட்ட செயலாளர் தூண்டுதலின் பேரில் மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் கல்லூரிவாகனத்தில் பயணம் செய்த மாணவர்களை இறக்கிவிட்டு பேருந்தில் அனுப்பி வைத்துள்ள சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி வருகிறது .
டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பேட்டி
சாந்தா மதுபழக்கத்தால் உயிரிலந்தவரின் மனைவி
அம்பிகாபதி







