வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு – கார்த்திகை தீபத்திற்கு போதுமான பேருந்துகள் இயக்கபடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு
வேலூர் மாவட்டம்வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு வரும் 24-ஆம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் காண ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக பக்தர்கள் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு பேருந்துகள் முறையாக இயக்க தயார் நிலையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.வேலூர் போக்குவரத்து மண்டலத்தை பொருத்தவரையில்வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 40- பேருந்துகளும் ஆற்காடில் இருந்து 30- பேருந்துகளும் மற்றும்ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவுகள் பக்தர்கள் வருவதால் திருப்பதியில் இருந்து சித்தூர் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு 11-சிறப்பு பேருந்துகளும் பெங்களூரில் இருந்து 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.








