கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை போலீஸ் தீவிர விசாரணை
வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள கார்ணாம்பட்டு கிராமத்தில் மே பிளவர் பகுதியில் 50 குடியிருப்புகள் உயர் பதவி உள்ளவர்களின் குடியிருப்பு உள்ளது சுற்றிலும் காம்பவுண்ட் பாதுகாப்புடன் உள்ள பகுதி இக்குடியிருப்பு பகுதியில் டாக்டர் கிறிஸ்டியானா இவர் ராணிப்பேட்டை உள்ள எஸ்.எம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் இவரது கணவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் இர்வின் இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 சவரன் தங்க வைர நகைகளை திருடிகொண்டு அதன் அருகிலிருந்த சி.எம்.சி ஓய்வு பெற்ற மருத்துவமனை இயக்குனர் மமன் சாண்டி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர் அதன் அருகில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒருவரது வீட்டையும் உடைத்து உள்ளே புகுந்து திருடர்கள் பார்த்துள்ளனர் இதுகுறித்து திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் திருடு போன தங்க வைர நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும்
காட்பாடி பகுதிகளில் மீண்டும் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது இது ஆந்திர மாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது பாதுகாப்பு நிறைந்த சுற்றி காம்பவுண்ட் சுவர் செக்யூரிட்டிகளின் கண்காணிப்பு உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது








