• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்: பாலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு வெடிப்பு; ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை;

நாகை மாவட்டத்தில் மேட்டூர் அணை நீர் வரத்தின்றியும், பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. குறிப்பாக பாலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் வறண்டு வெடித்துக் காணப்படுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரி நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதாலும், கடைமடைப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வந்து சேராததாலும் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.

முதலில் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து பயிராக வளர்ந்த நிலையில், தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து பெய்த மழையால் முதல் கட்டப் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிலத்தை உழுது மழையை நம்பி இரண்டாவது முறையாக விதைப்பு செய்துள்ளனர்.

தற்போது அந்தப் பயிர்கள் சுமார் 15 நாட்கள் வயதுடையதாக உள்ள நிலையில், போதிய மழை இல்லாததால் வயல்வெளிகள் வறண்டு வெடித்துள்ளன. பயிர்களும் வெயிலின் தாக்கத்தால் கருகி வருகின்றன.

நாகை மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையையே பின்பற்றியுள்ளனர்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து இல்லாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 20 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளன.

கதிர் வெளிவராத நிலையிலேயே பயிர்களுக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறையாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் டீசல் இன்ஜின்கள் மூலம் நீர் இறைக்கக்கூட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு மழையும் போதிய அளவு கைகொடுக்காததால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

குறிப்பாக கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி, இறையான்குடி, களத்திடல்கரை, மடப்புரம், வாழக்கரை, ஏர்வைக்காடு, எட்டுக்குடி, திருக்குவளை, திருவாய்மூர், ஈசனூர், வெண்மணச்சேரி, கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் பாலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2,500 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் தண்ணீரின்றி வறண்டு, வயல்வெளிகள் ஆங்காங்கே வெடித்துப் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.

கடந்த ஆண்டு இரண்டு போக சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள், இந்த ஆண்டு ஒரு போக சாகுபடியைக்கூட முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே விவசாயப் பணிகளுக்காக செலவு செய்த பணத்தை இழந்துள்ள நிலையில், விவசாயக் கடன்களும் முறையாகக் கிடைக்கவில்லை என்றும், பயிர்க்கடன் தள்ளுபடியின் பலனும் முழுமையாக தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுவரை எந்தவொரு அதிகாரியும் தங்களது பகுதிகளுக்கு நேரில் வந்து பயிர்களின் பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆறுதல் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள  விவசாயிகள்  ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் கடைமடைப் பகுதி விவசாயிகளின் துயரத்தைப் போக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

Next Post

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6