• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திரைத்துறையில் நடிகர் வடிவேல் இல்லாதஇடத்தில் அரசியல் களத்தில் வைகோVS.பாபு இறுதிஊர்வலத்தில் விமர்சனம்

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திரைத் துறையில் நடிகர் வடிவேல் இல்லாத இடத்தில் இன்று அரசியல் களத்தில் வைகோ நகைச்சுவை காமெடி நடிகராக மாறிவிட்டது சோகமாக உள்ளதாகவும், சொந்த கட்சியின் மாவட்ட செயலாளர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காத வைகோ வி.எஸ் பாபு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று இன்னொரு கட்சி தலைவர் பற்றி சிலாகித்து பேசுவது வெட்ககேடு வேதனை என திருவள்ளூர் அருகே விளாப்பாக்கம் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் மல்லை சத்யா இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்….

திருவள்ளூர் அடுத்த விளாப்பாக்கம், கெருக்கம்பூண்டி கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா பர்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண்ரஷீத், திராவிட வெற்றிக் கழக தலைவர் மல்லை.சத்யா, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து பள்ளிவாசல் ஜமாத்தாருக்கு வாழ்த்துகளை தெரிவித்தாா். தொடர்ந்து பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திருவள்ளூர், ஈக்காடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மல்லை.சத்தயா கோவையில் செய்தியாளர்களிடம் வைகோ நடந்து கொண்ட விதம் ஆதிக்க வர்க்க சனாதன திமிரு என்றும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் நான் மட்டும் தான் பதில் சொல்வேன் என கூறுவது செத்த பிணத்தை தழுவுவதற்கு சமம் என்று சாடினார். வைகோ தன்னை முட்டாள் என வர்ணித்துள்ளார், 32 ஆண்டுகளாக கண்மூடிகொண்டு வைகோவை பின்பற்றியது நாங்கள் முட்டாள் தான் திரைத் துறையில் நடிகர் வடிவேல் இல்லாத இடத்தில் இன்று அரசியல் களத்தில் வைகோ நகைச்சுவை காமெடி நடிகராக மாறிவிட்டது சோகமாக உள்ளது என விமர்சனம் செய்தார். இன்று நடந்து கொண்டிருக்கும் அரசியலை திசை திருப்புவதற்காகவே வைகோ இது போன்று பேசி வருகிறார். திருமணம் வீட்டிற்கு சென்றாலும் தனக்கு தான் மாலை விழவேண்டும் சாவு வீட்டிற்கு சென்றாலும் தனக்கு தான் மாலை விழ வேண்டும் என தோரணையில் வைகோ இருந்து வருகிறார். கூட்டணி கட்சியில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் யார் என்று தெரியவில்லை என வைகோ கூறுவது வெட்கக்கேடானது வேதனைக்குரியது என்றும், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாள்தோறும் அரங்கேறி வருவதை திசை திருப்புவதற்காக வைகோ போலியான நாடகத்தில் அரங்கேற்றி வருகிறார். திருப்பரங்குன்றம் தீப தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது ஒரு பெண்ணுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கு பிறகு வேண்டம் என்பதுபோல் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எனக்கும் வேறுபாட்டு கருத்து இருப்பதாக நான் அறியவில்லை நாட்டின் சமூக ஒருமைப்பாடு மத நல்லிணக்கம் தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் மாநில சுயாட்சிக்கு எதிராக திருப்பரங்குன்றம் தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற துணை ராணுவத்தை அழைத்துக் கொண்டு சொல்லுங்கள் என்று சொல்வது மாநில சுயட்சிக்கு எதிரானது என்றும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும், காவேரி குறுக்கே மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்வது இந்தியாவின் இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாக இருக்கும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளிக்கக்கூடாது அனுமதி அளித்தால் நடைபெறும் விளைவுகளுக்கு அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும், படகோட்டியாக உள்ள மீனவர்களை நாடோடியாக மாற்றக்கூடிய வேலையை இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. சென்னை முதல் சேலம் வரையிலான சாலை திட்டம் ரத்து செய்தது போன்று புதிய தலைமைச் செயலகம் கட்டுவது ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென நினைத்த நீங்கள் ஏன் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தீர்கள் எனவும், மீனவர் நலனில் அக்கறை கொண்டவராக நடித்த நீங்கள் மீனவர்களுக்கு எதிராக மாறிக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி : மல்லை சத்யா – திராவிட வெற்றிக் கழக தலைவர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திண்டுக்கல்லில் தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம்

Next Post

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் அருகே ஸ்ரீ திரிவேணி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6