மயிலாடுதுறை அருகே பள்ளிகள் நிறைந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் , முகக்கவசம் அணிந்து செல்லும் அவல நிலை; “விஜய் மாமா நடவடிக்கை எடுங்க” என பள்ளி மாணவர்கள் உருக்கமான கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், நான்கு முக்கிய பள்ளிகளுக்கு அருகிலேயே குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் மாணவர்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளனர்.நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு அருகாமையிலேயே அரசு மேல்நிலைப்பள்ளி , அரசு தொடக்கப்பள்ளி தனியார் பள்ளி என்ன நான்கு பள்ளிகள் அமைந்துள்ளது. குப்பையில் தேங்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் முகக்கவசம் (Mask) அணிந்துகொண்டே பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.அதுமட்டுமின்றி, இறைச்சிக் கழிவுகளைத் தின்ன வரும் தெருநாய்கள் கூட்டத்தால் மாணவர்களைத் துரத்திக் கடிக்கும் அபாயமும் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகள் ஓரமாகத் தள்ளி குவிக்கப்பட்டன. ஆனால், அவை முழுமையாக அகற்றப்படாததாலும், கண்காணிப்பு இல்லாததாலும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில் விஜய் மாமா குப்பைகளை அகற்றி தர வேண்டும் என முதலமைச்சருக்கு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைட் :-
முகமது மாயிர் – பள்ளி மாண வன்
ரியாஸ் – பொதுமக்கள்







