கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி 44க்கும் மேற்படோரிடம் பணி வழங்குவதாக சுமார் ஒன்றரை கோடி மோசடி செய்ததாக பாதிக்கபட்டவர்கள் கூறி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டாக எட்டாயிரம் ரூபாய் கட்டி வேலை பார்த்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜா 58வயது என்பர் உட்பட அந்த நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக வேலை பார்த்த பெரும்பாலான பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 44க்கும் மேற்பட்டோரிடம் இரண்டு லட்சம் முதல் பதினைந்து லட்சம் வரை மாதம் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி வாங்கி உள்ளார் தொடர்ந்து வேலை கொடுக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காததால் ஏமாற்ற பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 13351000 ரூபாய் ஏமாந்ததாக புகார் கொடுத்து ஏமாந்ததாக புகார் அளித்தனர் இந்த நிலையின் இன்று பாதிக்கப்பட்டவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அந்த நிறுவனத்தை நடத்தும் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பாதிக்கப்பட்டோர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பையும் காவல்நிலைம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் பாதிக்கபட்டவர்களா இது போன்று பலர் பாதிக்கபட்டுள்ளதால் உடனே நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
பேட்டி
1,பிரியா
பாதிக்கபட்ட பெண்
2,ராஜா
பாதிக்கபட்டவர்








