குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த மீனாக்ஷி அம்பாள் சமேத சுந்தரேசுவரர் ஆலயம் கும்பாபிஷேகம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மீனாக்ஷி சமேத சுந்தரேசுவரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் பழமை மாறாமல் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவையொட்டி ஆலயத்தின் அருகே யாகசாலை அமைத்து கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமங்கள் செய்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து ஐந்து குண்டங்கள் அமைத்து கடந்த 18ஆம் தேதி முதற்காலயாக சாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்ற வந்த நிலையில் இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு இதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் மங்கள வாத்தியங்கள் வான வேடிக்கை முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை திருப்பரங்குன்றம் சிவாச்சாரியார் சிவஸ்ரீ ராஜா பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் சுமந்து பக்தர்கள் புடை சூழ ஆலயத்தை வலம் வந்து விமான கும்பாபிஷேகம்.மற்றும் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மூலவர்மீனாக்ஷி மற்றும் சுந்தரேசுவரருக்குமஹா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.







