மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரிக்கு, கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி, மயிலாடுதுறை பாஜக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு உறுதி அளித்தபடி போதிய தண்ணீர் திறக்காத காரணத்தால், மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடையாத காவிரி நீர், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம், நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம், உள்ளிட்ட சிவாலயங்கள், மற்றும் ஆழ்வார்கள் பாடல் பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயம் ஆகியவற்றில் ஐப்பசி துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது கடைசி பத்து நாட்கள், அனைத்து ஆலயங்களிலும் இருந்தும் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் காவேரி கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பதுடன், தீர்த்த வாரி நடைபெறும். ஐப்பசி மாதம் கடைசி நாளன்று நடைபெறும் கடை முக தீர்த்தவாரி, தமிழகத்தின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். காவிரி ஆற்றை கொண்டாடும் விதமாக அமைந்துள்ள இந்த விழாவின் போது மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு காவிரியில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், மயிலாடுதுறை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும் மத்திய அரசு வழக்கறிஞருமான , கே ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த பத்தாம் தேதி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். வழக்கு விசாரணையில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், தீர்த்தவாரிக்குள் போதிய தண்ணீர் மயிலாடுதுறையை வந்தடையும் வகையில் தண்ணீர் திறக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதிக்கு கூட இன்னும் காவிரி நீர் வந்து சேராத நிலையில், நாளை பிற்பகல் கடை முக தீர்த்தவாரி நடைபெறும் காவிரி துலா கட்டத்திற்கு காவிரி நீர் வந்து சேர்வது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. நீதிமன்றத்தில் உறுதி அளித்தது போல் தமிழக அரசு உரிய தண்ணீர் திறக்காததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் காவிரி ஆற்றின் மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதிகளில், வழக்கு தொடர்ந்து இருந்த வழக்கறிஞர் கே ராஜேந்திரன் தலைமையிலான சமூக ஆர்வலர் குழுவினர் இன்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்கள் இடம் பேசிய, வழக்கறிஞர் கே ராஜேந்திரன், போதிய அளவு அதிகாரிகள் தண்ணீர் திறக்கவில்லை என்பதை ஆய்வு செய்து இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம், என்றும் வருங்காலங்களில் இந்த விழாக்கள் நடைபெற அரசு ஒரு கமிட்டி அமைத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டி:-
கே ராஜேந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் மத்திய அரசு வழக்கறிஞர் பாஜக







