60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திருவாரூர் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலய சூரசம்ஹர விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை திடீர் தடை: பக்தர்கள் கொந்தளிப்பு.
திருவாரூர் வடக்குவீதி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலய சூரசம்ஹர விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் திடீர் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவில்களின் ஒன்றாக ஆலய வடக்கு கோபுரவாயிலையொட்டி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆயலம் இருந்துவருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தொன்மைசிறப்புவாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா என்பது கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
மேலும் கந்த சஷ்டி விழாவின் 6ம் நாள் சிறப்பு நிகழ்வாக சூரசம்ஹர விழா விமர்சையாக நடைபெற்று வந்தன. இவ்விழாவில் பங்குகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூரபத்மனை வதம் செய்யும் வைபவத்தை கண்டுகளித்து பின்னர் ஆலயத்தின் மூலவர் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு தங்களது விரத்தை நிறைவு செய்துவந்தனர்.
இந்த நிலையில் வடக்குவீதி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தினை நிர்வகித்துவரும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சூரசம்ஹர நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு திடீரென தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் மூலம் சூரசம்ஹர நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதனால் இவ்வாண்டு வடக்குவீதி ஸ்ரீபழனியாண்டவர் ஆலய சூரசம்ஹர நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது என கூறியிருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி : வெங்கடேசன் – பக்தர்







