பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு வழங்கி பட்டாசு இனிப்புகள் புத்தாடை என ஊழியர்களை வியப்பில் ஆழ்த்திய உரிமையாளர் .நெகிழ்ச்சி தருணம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கம்பாடி பகுதியில் தனது நிறுவனத்தை நடத்தி வரும் லக்கிஷா குழுமத்தின் தலைவர் உரிமையாளர் ஏ .கே. சந்துரு என்பவர் தனது ஊழியர்களை பெரும் மகிழ்ச்சி வியப்பில் ஆழ்த்திய தருணம். தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்கள் குடும்ப உதவியாகவும் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது நிறுவனம் சார்பில் ஒரு பெரும் நிகழ்ச்சியே நடத்தினார் இதில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு பரிவட்டம் கட்டி பண மாலை அணிவித்து தங்க நாணயம் வழங்கி பட்டாசு இனிப்பு புத்தாடைகளை வழங்கினார் தனது நிறுவனம் நடைபெறுவதற்கு ஆண்டு முழுவதும் உழைக்கும் தனது ஊழியர்கள் ஒரு நாளாவது பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் தங்களது கஷ்ட சூழ்நிலைகளிலும் உழைப்பை காட்டும் ஊழியர்களை கவுரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் குறிப்பாக விடுப்பு எடுக்காமலேயே பணியாற்றும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர்கள் உழைப்பு இல்லை என்றால் எந்த நிறுவனம் என்றாலும் முன்னேறி செல்ல முடியாது என்பதே உண்மை இதனை மற்றவர்களும் உணரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக தெரிவித்தார் நிகழ்ச்சியில் வணிகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.








