சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் ஜெயிலர் 2 வசூல் சாதனையை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வெற்றி கரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை சுமார் 900 கோடி வசூல் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமையில்,மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட ரசிகர்கள் பலர் பங்கேற்று ஜெயிலர் 2 படம் வெளியாகி உள்ள திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்து பின்னர் திரையரங்கில் கேக் வெட்டி திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்







