• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

NFITU அதிரடிரீல்ஸ் மற்றும் விளம்பரங்கள் போதாது… தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எங்கே ?

by Satheesa
November 2, 2026
in News, News
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

NFITU அதிரடிரீல்ஸ் மற்றும் விளம்பரங்கள் போதாது… தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் எங்கே?

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்! மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு NFITU எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் – மரக்காணம்:

NFITU தொழிற்சங்க சார்பில் மரக்காணம் தாலுகா அனுமந்தை கிராமத்தில் ஆட்டோ தொழிற்சங்கக் கிளை திறப்பு விழா, அனுமந்தை ஆட்டோ ஸ்டாண்டு தலைவர் திரு. வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் .

இதனைத் தொடர்ந்து ஆத்திக்குப்பம் கிராமத்தில் NFITU கட்டுமானத் தொழிற்சங்கக் கிளை திறப்பு விழா, கட்டுமான அணி மாநிலத் துணைச் செயலாளர் திரு. சிவபாலன், கிளைத் தலைவர் திரு. ஞானமூர்த்தி மற்றும் கிராமத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். NFITU மாநிலத் தலைவர் திரு. சீனிவாசன் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. ஆலங்குப்பம் பாலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநிலத் தலைவர் சீனிவாசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றன. எஃப்.சி., இன்சூரன்ஸ், டயர், உதிரிபாகங்கள் உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

முதலமைச்சரின் வெற்றிப் பயணத் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஆட்டோக்களுக்கான எஃப்.சி. மற்றும் புதுப்பித்தல் செலவுகளை அரசே ஏற்று இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் சீனிவாசன் வலியுறுத்தினார்.

மாநிலப் பொதுச்செயலாளர் ஆலங்குப்பம் பாலா கடும் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்களைக் கடந்தும் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் தொழிலாளர்களும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. பர்வேஷ் முகம்மது அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதைவிட ரீல்ஸ், விளம்பர நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவதாக ஆலங்குப்பம் பாலா குற்றம்சாட்டினார்.

40 நலவாரிய அலுவலகங்கள் – 825 ஊழியர்கள் – ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவை!

தமிழகத்தில் 40 தொழிலாளர் நலவாரிய அலுவலகங்களும், நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் என 825 பேரும் இருந்தும் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் நிலுவையில் இருப்பது ஏன்?

திருமண உதவி, கல்வி உதவி, மகப்பேறு உதவி, விபத்து நிவாரணம், இயற்கை மரண உதவி போன்ற நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முற்றுகைப் போராட்டம் நடத்திய பின்னரே நிலுவைப் பணிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டதாக NFITU தெரிவித்தது.

17 அம்சக் கோரிக்கைகள் என்ன ஆனது?

தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் NFITU சார்பில் ஏற்கெனவே 17 அம்சக் கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.

தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அதிகாரிகளின் செயல்பாடுகளையும் நலவாரியங்களின் நிர்வாகத்தையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று NFITU வலியுறுத்தியது.

முதலமைச்சருக்கு நேரடி வேண்டுகோள்!

தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் நலத்துறை என்பது விளம்பரத்திற்கான துறை அல்ல; உழைக்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய துறை. தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத அமைச்சர் பதவியில் தொடர்வதால் என்ன பயன்? அவர் பதவி விலக வேண்டும் என்று ஆலங்குப்பம் பாலா வலியுறுத்தினார்.

மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் – NFITU இறுதி எச்சரிக்கை!

தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் ஒன்றிணைத்து மாநிலம் முழுவதும் மாபெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்துவோம் என மாநிலப் பொதுச்செயலாளர் திரு. ஆலங்குப்பம் பாலா எச்சரித்தார்.

NFITU-வின் தொழிலாளர் நல முழக்கம்:

“தொழிலாளர்கள் பிச்சை கேட்கவில்லை; தங்களுக்குச் சேர வேண்டிய உரிமையைக் கேட்கிறார்கள்!

ரீல்ஸ் வேண்டாம் – தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வேண்டும்!

விளம்பரம் வேண்டாம் – தொழிலாளர்களுக்கு உரிமையான உதவி வேண்டும்!

வாக்குறுதி வேண்டாம் – உடனடி நடவடிக்கை வேண்டும்!

தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் வரை NFITU-வின் போராட்டக் குரல் ஓயாது!”

*– NFITU மாநில நிர்வாகம்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Next Post

வைத்தீஸ்வரன் கோயிலில் ஜெயிலர் 2 வசூல் சாதனையை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

வைத்தீஸ்வரன் கோயிலில் ஜெயிலர் 2 வசூல் சாதனையை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6