மத்திய மாநில அரசுகள் இலவச கல்வியை அளிக்க முன் வரவேண்டும் வேலூர் ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தின விழாவில் வி.ஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு – 1957 ஆம் முதல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் இன்று சந்திப்பு
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்க கூட்டம் தென்னிந்திய திருச்சபையின் வேலூர் பேராயரும் கல்லூரியின் செயலாளருமான பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவரும் பழைய மாணவர் சங்க தலைவருமான ஜி.விஸ்வநாதன் நிர்வாகிகள் இளங்கோ,ஸ்டான்லி ஜோன்ஸ் ,டேனியல் எழிலரசு முன்னாள் மத்திய அமைச்சர் என்.,டி.சண்முகம் ,முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அப்பு,கலையரசு உள்ளிட்ட திரளான 1000-க்கும் மேற்பட்ட 1957 ஆம் ஆண்டு முதல் ஊரீசு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இன்று சந்தித்து ஒருவருக்கொருவர் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்
இவ்விழாவில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில் இந்தியாவில் எந்த அரசும் கல்வியை மக்களுக்கு இலவசமாக தர முன் வருவது கிடையாது வேட்டி சேலை இலவச பேருந்து என இலவசங்களை அறிவிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் யாரும் கல்வியை இலவசமாக தருவதில்லை மக்களும் கேட்பதில்லை வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகள் உயர் கல்வியை மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் உயர் கல்விக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டுமென பேசினார் இதில் திரளானோர் பங்கேற்றனர்

















