உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவில் அராஜகம் செய்து பணம் பறித்த திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மகாலட்சுமி மற்றும் 30கும் மேற்பட்டோர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று ஃபியூஷன் 24 என்ற உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவின் போது 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என உடற்பயிற்சி கூட உரிமையாளரிடம் அடாவடி செய்து அராஜகமாக 50,000 பறித்த சம்பவத்தில் ஏற்கனவே உடற்பயிற்சி கூட உரிமையாளர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மகாலட்சுமி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் உடற்பயிற்சி கூட திறப்பு விழாவின் போது அராஜகம் செய்து உரிமையாளரிடம் 50,000 ரூபாய் பணம் பறித்த திருநங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடற்பயிற்சி கூட திறப்பு விழாவின் போது திருநங்கைகள் பிரச்சனை செய்தது தொடர்பாக உடற்பயிற்சி கூட உரிமையாளர் தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து தகவல் தெரிவித்த நிலையில் பணம் பரப்பில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பிரச்சனையில் ஈடுபட வேண்டாம் என கூறியும் அவர்கள் வேண்டுமென்றே அராஜகமாக பணம் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது,
திருநங்கைகளின் மீது உள்ள நம்பிக்கையை கெடுக்கும் வகையிலும் ஏழ்மையாக உள்ள திருநங்கைகள் யாசகம் கேட்டு பிழைக்கும் சூழலை மாற்றி பொதுமக்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் திருநங்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்றத்தூர் திருநங்கை மகாலட்சுமி மற்றும் 20கும் மேற்பட்ட திருநங்கைகள் தாலுகா காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர்.

















