மழையையும் பொருட்படுத்தாமல் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி!
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் வாரத்தை முன்னிட்டு “மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றதுமழை பெய்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்தப் பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசித்ரா தொடங்கி வைத்தார்.மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி, அடுக்கம்பாறை பேருந்து நிலையம் வரை சென்று, பின்னர் மீண்டும் மருத்துவமனை வளாகத்திலேயே நிறைவடைந்தது.இதில் ஏராளமான மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து, உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
மழையையும் பொருட்படுத்தாமல் மருத்துவத் துறையினர் ஒன்றிணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வுப் பேரணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

















