வேலூரில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது – 32 மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு.
வேலூர் மாநகரில் போதை மாத்திரைகள் அதிக விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் மற்றும் தெற்கு காவல் துறையினர் சங்கரன் பாளையம், அண்ணா சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த 3 இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டதில் அவர்களிடம் 32 போதை மாத்திரைகள் கண்டறியப்பட்டது.பின்னர் அவர்களை வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் வேலூர் மாநகரத்துக்குட்பட்ட ஓட்டேரியைச் இந்திரா நகரை சேர்ந்த தனுஷ் (23), பாகாயம் எம்.கே. நகரைச் சேர்ந்த விஜய் (22), ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த விஷ்ணு (18) என்பது தெரியவந்தது.பின்னர் அவர்களிடமிருந்து 32 போதை மாத்திரைகள் மூன்று செல்போன் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர். வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

















