தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி திருவாரூரில் வெகுமக்கள் அமைப்புகளின் சார்பில் பேரணியாக சென்று ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி திருவாரூரில் வெகுமக்கள் அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சட்டவிரோத சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். காலவரையறையை அடிப்படையாக கொண்டு திருத்தத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்தை உறுதி செய்ய வேண்டும், தேர்தல் ஆணையத்தின் நியமன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,
விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்கும் தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், பண அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

















