தரங்கம்பாடியில் பனை விதை நடும் நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தவெகவினர் இருதரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதை நடவு பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உட்பட அதிகாரிகள் , தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், பள்ளி , கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது உட்கட்சி பூசல் காரணமாக தவெகவினர் இரு தரப்பாக பிரிந்து நிகழ்வில் அமைச்சருக்கு அருகில் யார் நிற்பது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலயே இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகிலேயே இருதரப்பை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தர். பின்னர்
அனைவரும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அருகில் இருந்த காவல்துறையினர் செய்வது அறியாது, திகைத்து நின்ற நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது















