நகர்ப்புறப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாது காவலர்களுக்கான இலவச பயணச் சலுகை அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.கடந்த ஆட்சிக் காலத்தில் நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது பாதுகாவலர்களுக்கும் இலவச பயணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் இச்சலுகை விரிவுபடுத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட போதிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையிலும் இத்திட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு இலவச பயணச் சலுகைக்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி:சீனிவாசன் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்)

















