குத்தாலம் அருகே பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தவெக நிர்வாகியை கண்டித்த மாமியார் மீது தாக்குதல்:- பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவரது மருமகளிடம் தவெக பிரமுகரான குத்தாலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன் (28) என்பவர் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16-ஆம் தேதி இரவு சாந்தி வீட்டில் மருமகள் தனியாக இருந்த போது சீனுவாசன் வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதைப் பார்த்த சாந்தி சீனிவாசனை கண்டித்த நிலையில் சீனிவாசன் சாந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தவெக நிர்வாகி சீனிவாசனை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















