புவிவெப்பமாதலை குறைக்க திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை தவெக மாவட்ட செயலாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர் .
உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம், அதிகரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங் களினால் பசுமை பரப்பு குறைந்து வருகிறது. இதனால், பருவ நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு ஒருபுறம் கடும் வறட்சி, மறுபுறம் அதீத மழை பொலிவு என பேரழிவு ஏற்பட்டு வருகிறது. மரங்களை அதிகளவில் நடுவதே இதற்கு ஒரே தீர்வு ஆகும். காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்தால் சுற்றுச்சூழல் சமநிலையை பேணலாம். புவி வெப்பமயமாதல், எல்நினோ மற்றும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். இந்த நிலையில், பசுமை பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பதோடு, வருங்கால தலைமுறையினரை காத்திடும் மிக முக்கிய செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; மண்ணைக் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வேம்பு , புங்கன் , அரசமரம் , ஆலமரம் , பூவரசு . வெப்பாலை , நீர்மருது , சரக்கொன்றை , மகாகனி உள்ளிட்ட சுமார் 1 லட்சம் மரக் கன்றுகளை நடும் நெடும் திட்டத்தை சிங்கப்பூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பழனிச்சாமி ஏற்படுத்தி உள்ளார். இதன் தொடக்க விழா திருமக்கோட்டை நல்லான்பிள்ளைத் தெரு வடிவச்சி அம்மன் திருவடிகளில் சமர்பித்து கோயில் குளக்கரையில் நடந்தது . இதில், சிங்கப்பூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதி பழனிச்சாமி , தவெக மாவட்ட செயலாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு , 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடங்கி வைத்தனர்.

















