தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது…
தமிழ்நாடு முழுவதும் மாநில அளவில் நடைபெறுகின்ற சாலை மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக..
திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், மணக்கால் அய்யம்பேட்டை, விளமல், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது..
திருவாரூர் விளமல் கல்லு பாலம் அருகில்...தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில்.. "விவசாய கடனை தமிழக வெற்றிக்கழக வாக்குறுதி படி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்... டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்... காவிரியில் 9000 கன அடி வினாடிக்கு தொடர்ந்து திறந்து விட வேண்டும்... கர்நாடகா அரசிடம் பேசி கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற வேண்டும்.." உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ மற்றும் சிபிஎம் விவசாய சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்ந்த விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் விவசாய சங்கங்களை சார்ந்த சேகர் மற்றும் முருகையன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனால் திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேட்டி: மாசிலாமணி,
மாநில பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (CPI)

















