மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று தொடங்கி வைத்தார். 120 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் வட்டாரத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. தாம்பாள தட்டு, புடவை இனிப்பு, வாழைப்பழம் மற்றும் மங்கல பொருட்கள் அடங்கிய தொகுப்பை எம்எல்ஏ நிவேதா முருகன் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் பிரபா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா மற்றும் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து நழுங்கிட்டு கையில் காப்பு மாட்டி வளையல் அணிவித்து சமுதாய வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. பின்னர் அனைவருக்கும் மதிய உணவாக பல்வேறு வகை கலவை சாதங்கள் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.















